பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் புதிய கட்டிடங்கள் இரா.தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      பெரம்பலூர்
Perambalur

 

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் 9.00 லட்சம் மதிப்புள்ள புதிய கட்டிடங்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்.

புதிய கட்டிடங்கள்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிக்குளம் மலை அடிவாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் அவர்களின் நினைவாக ரூ.3.00 லட்சம் மதிப்பிலான பயணியர் நிழற்குடையை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த பயணியர் நிழற்குடையை திறந்ததின் மூலம் செட்டிக்குளம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.00 லட்சம் மதிப்புள்ள செட்டிக்குளம் மகளிர் சுகாதார வளாகத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார். அங்கு இருந்த பெண்களிடம் இந்த சுகாதார வளாகத்தினை சரியான முறையில் பயன்படுத்திகொள்ளுமாறும் அதனை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குநர் என்.கே.கர்ணன், செட்டிக்குளம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் நடராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து