முக்கிய செய்திகள்

மகளிர் குழு மற்றும் மகளிர் கிராம வளர்ச்சி சங்கம் இணைந்து நடத்திய மகளிர் தின விழா

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த திருப்பெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுகோட்டை, தண்டலம், பென்னலூர், காட்டரம்பாக்கம் மற்றும் கீழலூர் பஞ்சாயத்து அளவிலான மகளிர் குழு கூட்டமைப்புகள் மற்றும் அனைத்து மகளிர் கிராம வளர்ச்சி சங்கம் இணைந்து நடத்திய மகளிர் தின விழா திருப்பெரும்புதூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மகளிர் சுய உதவி குழு

இதில் திருப்பெரும்புதூர் சிண்டிகேட் வங்கியிலிருந்து நான்கு மகளிர் குழுவுக்கு 2,50,000 வீதம் ரூபாய் 10-லட்சம் நேரடி கடன் வங்கி வரைளாகவும், இதேபோல் வளர்புரம் இந்தியன் வங்கியிலிருந்து பத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 34,25,000 கடனாக வழங்கப்பட்டது. திருப்பெரும்புதூர் கனரா வங்கியிலிருந்து 52,65,000 நேரடி கடனாக வழங்கப்பட்டது. இதில் 206 உறுப்பினர்கள் பயனடைந்தனர்.

இவ்விழா பி.எல்எ.ப் செயலாளர் ரீட்டா தலைமையில் நடைப்பெற்றது. இதில் கனரா வங்கி மேலாளர் பூவிழி, இந்தியன் வங்கி மேலாளர் விஜயலட்சுமி, சிண்டிகேட் வங்கி மேலாளர் ஆனந்தகுமார், காஞ்சிபுரம் மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசராவ், யுண்டாய் முதுநிலை மேலாளர் ஸ்ரீதர், துனை மேலாளர் அருன் மற்றும் மகளிர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் அனைத்து மகளிர் மற்றும் கிராம முன்னேற்ற சங்க செயலாளர் ஜோதி நன்றி உரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து