முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டியில் சாலைவிரிவாக்க பணி: அமைச்சர்கள் உடுமலைராதாகிருஷ்ணன், கடம்பூர்ராஜூ துவக்கி வைத்தனர்

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டி லட்சுமிமில் முதல் லாயல்மில் வரை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. அதனால் லட்சுமிமில் முதல் லாயல்மில் வரை நான்கு வழிசாலை ஆக்க முடிவெடுககபட்டது. அதன்படி ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 7கோடி மதிப்பில் சாலையை அகலபடுத்த நிதி ஒதுக்கபட்டு அதற்கான பணிதுவக்கவிழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று கோவில்பட்டி லட்சுமிமில் அருகே நடந்தது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அமைச்சர் கடம்பூர்ராஜூ ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

அடிக்கல் நாட்டு விழா

இவ்விழாவில் மாவட்டஆட்சிதலைவர் வெங்கடேஷ், கோவில்பட்டி கோட்டாட்சிதலைவர் அனிதா, மாவட்ட செய்திமக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், வட்டாட்சியர் ஜான்தேவசகாயம், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சித. செல்லப்பாண்டியன், நகராட்சி ஆணையாளர் அட்சயா, கோவில்பட்டி டிஎஸ்பி. ஜெபராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், கோவில்பட்டி அதிமுக பெருநகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், பாண்டவ்hமங்கலம் தொட்கக கூட்டுறவு வங்கி தலைவர் அன்புராஜ், மாவட்ட விவசாயஅணி செயலாளர். இராமச்சந்திரன், துறையூர் கணேசப்பாண்டியன், வண்டாம் கருப்பசாமி, அம்பிகாவேல்மணி, செண்பகமூர்த்தி, ஜெமினி என்ற அருணாசலசாமி, எம்ஜீஆர் இளைஞரணி செயலாளர் சௌந்தராஜன், அல்லிதுரை, கம்மாபட்டி கிளை செயலாளர் செல்லச்சாமி, அண்ணா தொழிற்சங்கம் டிரைவர் விஜயன், செல்லையா, ஆபிரகாம்அய்யாத்துரை, மாணவரணி செயலாளர் போடுசாமி இளைஞர் பாசறை பழனிகுமார், வானரமூட்டி கூட்டுறவு இயக்குனர் அலங்கபாரபாண்டியன், இனாம்மணியாச்சி ஊராட்சி செயலாளர் இரமேஷ், இருளப்பன், மாணவரணி போடுசாமி, தலைமை கழக பேச்சாளர் மத. மூர்த்தி, உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து