வீடியோ: திரைப்பட துறையில் வெளிப்படை தண்மை வேண்டும் - ஆர்.கே.செல்வமணி

வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2018      சினிமா
Selvamani

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி..சென்னை வடபழனியில் செய்தியாளர் சந்திப்பு... தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கையில் நியாம் உள்ளது... திரையரங்கு உரிமைகள் அது நியாம் என்று தெரிந்தும் அவர்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.. திரையரங்கில் மூன்று தரப்பு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று கூறினாலும். திரையரங்கு உரிமையாளர் ஏற்றுக்கொள்ள வில்லை... 1100 திரையரங்கில் 400 திரையரங்கில் மட்டுமே ஆன்லைன் புராஜெக்டர் வைத்துள்ளனர். 100 கோடி லாபம் வரும் துறையை தனியார் துறைக்கு திரையரங்கு உரிமையாளர் கொடுத்தது ஏன் என கேள்வி எழுப்பினார்...7 லட்சம் மதிப்புள்ள புராஜக்டர் வைத்து அதிக அளவில் தனியார் லாபம் அடைந்துள்ளனர்... ஒருத்தர், ஒருத்தர் சண்டைபோட்டு கொண்டு இருந்தால் அதற்கு தீர்வு கிடைக்காது... அரசு தலையிட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்... 5லட்ஷம் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர்... திரைப்பட துறையில் வெளிப்படை தண்மை வேண்டும்... தொழிலாளர்கள் 1 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்...தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்த போராட்டம் நடத்துகிறார்கள். நாங்கள் நடத்தவில்லை ஆனால் அவர்கள் வேலைநிறுத்தம் போராட்டம் முடிவுக்கு வந்தால் மட்டுமே நாங்கள் வேலைக்கு செல்லமுடியும், அப்போது தான் எங்களுக்கு தீர்வு கிடைக்கும். ரஜினி, கமல், எங்கள் போராட்டத்திற்கு குரல் கொடுக்க வேண்டும். அஜித், விஜய், ரஜினி,கமல் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க அவர்கள் தலையிட்டு பெற்று தரவேண்டும் திரைத்துறையில் ஒழுங்கு முறை வாரியம் அமைக்க வேண்டும்...எம்.ஜி.ஆர். திரைத்துறையினை தன்னுடைய துறையாக பார்த்தார்... ஆனால் தற்போது உள்ள மூத்த நடிகர்கள் பார்ப்பது இல்லை  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து