முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவல் காலையில் கொக்கரக்கோஎன கூவுறதே தமிழ் வார்த்தை தான் கல்லூரி விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் அ.அன்வர்ராஜா பேச்சு

வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  கடலாடி-     சேவல் காலையில் கொக்கரக்கோ என கூவுறதே தமிழ் வார்த்தை தான் என  கல்லூரி விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்  அ.அன்வர்ராஜா பேசினார்.
   இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சோணைமீனாள் கலைக்கல்லூரியின்  20ம் ஆண்டு கல்லூரி விழா நடைபெற்றது.   விழாவில்   துணை முதல்வர் கயல்விழி வரவேற்று பேசினார்.கல்லூரி தாளாளர் சோபா ரெங்கநதன்  தலைமை தாங்கினர். சேர்மன் அசோக்குமார்-கல்லூரி முதல்வர் கோவிந்தராஜ்-ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அன்வர்ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.
 கூட்டத்தில் அன்வர்ராஜா எம்பி பேசியதாவது :
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு  கேட்கும் நேரத்தில் இந்த கல்லூரியில் பெண்களுக்கு 100சதவீதம் இடம் வழங்கியுள்ளனர். மாணவர்கள் விஞ்ஞான அறிவுகளை முறையாக பயன்படுத்திகொள்ள வேண்டும். அறிவு மூன்று வகைப்படும் நூலறிவு-நுண்ணறிவு-பட்டறிவு என தேவபாவனரே கூறியுள்ளார். இந்திய மாணவர்கள் உலக மாணவர்களிடையே போட்டியிடவேண்டும். இந்திய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது அரசியல் வாதிகள் ஆனால் ஆசிரியரா பணிபுரிந்து ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டவர் நமது ஏபிஜே.அப்துல்கலாம். இராமேஸ்வரம் இந்துக்களின் புனித தலமாகும். ஆனால் அப்துல்கலாம் மறைவிக்கு பிறகு இராமேஸ்வரம் இந்தியர்களின் புனித தலம் ஆகும்.
  அதிகாலையில் சேவல் கொக்கரக்கோ என கூவுறதே தமிழ் வார்த்தைதான் என கிருபானந்வாரியரே விளக்கங்களை கூறியுள்ளார். தமிழ் மொழி ஒரு தெய்வ மொழி என  பல சான்றோர்களே கூறியுள்ளனர். இவ்வாறு பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து