முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப். 2 வங்கிகள் செயல்படும் - ரிசர்வ் வங்கி

சனிக்கிழமை, 31 மார்ச் 2018      வர்த்தகம்
Image Unavailable

நடப்பு நிதியாண்டு (2017-18) நேற்றுடன் நிறைவடைந்தது. நிதியாண்டு 2016-17, 2017-18 ஆகியவற்றுக்கான வருமானவரி ரிட்டன்கள், 2016-17-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ரிட்டன்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். நேற்று மாலைக்குள் வரி செலுத்துவோர் வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக வருமான வரி அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக, நேற்று அனைத்து வங்கிகளும் இரவு 8 மணி வரை செயல்படும் என  ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதேபோல் ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மற்றும் அனைத்து கிளைகளும் இரவு 8 மணி வரை திறந்திருந்தன. இதுதவிர வழக்கமான வணிக நேரத்திற்கு பிறகும், நேற்று  நள்ளிரவு வரை மின்னணு பரிமாற்றங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டின் இரண்டாவது நாளான ஏப்ரல் 2-ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரிசர்வ் வங்கி ஏப்ரல் 2-ம் தேதி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து