முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா

ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2018      சினிமா
Image Unavailable

Source: provided

பாலிவுட்டில் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷர்மாவின் மிரட்டலான நடிப்பில் வெளியான பரி படம் தமிழில் ரீமேக்காகும் பட்சத்தில் நயன்தாரா என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா சர்மா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பரி’. பேய் கலந்த ஹாரர் படமாக ‘பரி’ உருவாகி இருந்தது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

ப்ரோசித் ராய் இயக்கத்தில் அனுஷ்கா ஷர்மா, பரம்ப்ரதா சாட்டர்ஜி, ரஜத் கபூர், ரிதாபாரி சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 2-ம் தேதி ஹோலி பண்டிகையை முன்னிட்டு ‘பரி’ திரைப்படம்  வெளியானது.

பாக்ஸ் ஆபிஸில் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ‘பரி’ படத்தின் கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக இருக்கும் என கருதி இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய படத்தின் தயாரிப்பு குழு முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி ரீமேக்காகும் பட்சத்தில் அனுஷ்கா ஷர்மா வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து