முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேப்பாக்கத்தில் இன்று டிக்கெட் விற்பனை: ஐ.பி.எல். கிரிக்கெட் கட்டணம் ரூ. 1,300 ஆக உயர்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 7ம் தேதி முதல் மே மாதம் 27ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகிறது. சூதாட்ட பிரச்சினை காரணமாக அந்த அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. ஐ.பி.எல். போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7லீக் ஆட்டம் நடக்கிறது. முதல் ஆட்டத்தில் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி வருகிற 10ம் தேதி கொல்கத்தா நைட்ரைடர்சை சந்திக்கிறது. இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையிலும் டிக்கெட் விற்பனை நடைபெறும். ஒருவருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்பட மாட்டாது. மேலும் ஆன்லைன் மூலமும் டிக்கெட் பெற்று கொள்ளலாம். குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 1,300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சி.டி மற்றும் இஸ்டாண்டுகளின் கீழ் பகுதியில் இந்த வகையிலான டிக்கெட் பெறுபவர்கள் அமரலாம். ரூ. 1,300க்கான டிக்கெட்டுகள் விக்டோரியா சாலையில் உள்ள 6ம் நம்பர் பூத்தில் கிடைக்கும்.

இதே போல் ரூ. 2,500, ரூ. 4,500, ரூ. 5 ஆயிரம், ரூ. 6,500 ஆகிய விலைகளிலும் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 1,300 உயர்த்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் சேப்பாக்கத்தில் மோதிய ஒரு நாள் ஆட்டத்தின் போது குறைந்தபட்ச டிக்கெட் ரூ. ஆயிரமாகத்தான் இருந்தது. தற்போது அதை விட கூடுதலாக ரூ. 300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குறைந்தபட்ச டிக்கெட் அதிகமாக இருக்கும் 2வது நகரம் சென்னைதான். பெங்களூரில் ஐ.பி.எல்.போட்டிக்கு குறைந்தபட்ச டிக்கெட் ரூ. 1700 ஆகும். ஆனால் மற்ற நகரங்களில் டிக்கெட் விலை மிகவும் குறைவாகும். மும்பையில் ரூ. 800, டெல்லியில் ரூ. 750, ஐதராபாத் மொகாலியில் தலா ரூ. 500, கொல்கத்தா ஜெய்ப்பூரில் தலா ரூ. 400 ஆக குறைந்தபட்ச டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 38 ஆயிரம் இருக்கைகள் உள்ளன. பாதுகாப்பு காரணமாக 3 கேலரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு மொத்தம் 6 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து