முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி அருகே நியூட்ரினோ ஆய்வு மைய வளாகத்தில் நாம் தமிழர் கட்சியினர் குடியிருப்பு போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2018      தேனி
Image Unavailable

போடி,- தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவரி மேலாண்மை வாரியம் அமைய வலியுறித்;தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும்,  நியூட்ரினோ ஆய்வகம் அமைய உள்ள அம்பரப்பர் மலையை முற்றுகையிட்டு அங்குள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நாம் தமிழர் கட்சியினர் குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.
  தேனி மாவட்டம்  போடிநாயக்கனூர் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள அம்;பர்அப்பர்மலை பகுதியில் கடந்த 2011 ஆண்டு 1500 கோடி ரூபாய்  செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க திட்டமிட்டு முதல் கட்டமாக நிதி ஓதுக்கீடு செய்து முதற்கட்ட பணிகளான மலை அடிவாரப் பகுதியில் தண்ணீர் தொட்டி, ஆய்வு மையம் அமைய இருக்கும் இடத்தை  சுற்றி இரும்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர்; வைகோ உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததை யடுத்து நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு நீதிமன்றம் இடைகால தடை விதித்தது. இந்த சூழலில் தற்போது மத்திய சுற்றுசுழல் பாதுகாப்பு அமைச்சகம் நியூட்ரினோ ஆய்வுதிட்டம் தொடங்க அனுமதி அளித்தது, தேனி மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் 50 லட்சம் டன் வெடி பொருட்களை கொண்டு பாறையை தகர்;க்கும் போது அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் முல்லைபெரியாறு அணை, இடுக்கி அணை உள்ளிட்ட 12 அணைகள் பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல் விவசாயம் முற்றிலும் அழிந்து பாலைவனமாக மாறக்கூடிய சூழல் உருவாகும் நிலை உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி காவரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காமல் தேனிமாவட்ட மக்களின் விவசாயத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிக்ககூடிய நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த செயல் மோடி அரசின் சர்வாதிகார போக்கை காண்பிப்பதோடு  அமெரிக்காவின் கைகூலியாக செயல்பவதையே காட்டுவதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டினர் மேலும் இந்த ஆயு;வுக்காக இப்பகுதி வழியாக கொண்டு வரப்படும்  18-ம் கால்வாய் திட்ட பாதையில் இந்த நியூட்ரினோ ஆய்வு கழிவுகளை வெளியேற்றி அவற்றை போடி கொட்டகுடி ஆற்றில் கலக்கி விடுவதால் கொட்டிகுடி ஆற்றை நம்பி விவசாயத்தி;ல் ஈடுபட்டு வரும் மக்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் அழியும் சூழல் உள்ளது.
எனவே இதனை கண்டித்த நாம் தமிழர் கட்சியினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நியூட்ரினோ ஆய்வு மையத்தில் அமைக்கபட்ட தண்ணீர் தொட்டியின் மீது ஏறி குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இது குறித்து விரைந்து சென்ற போடிநாயக்கனூர் தாலுகா காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை கைது செய்து இராசிங்காபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தததை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தேனியில் இருந்து அதிரடி சிறப்பு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து