பெரியகுளத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை முன்னாள் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2018      தேனி
periyakulama

தேனி - தமிழகத்தில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களும் இணைந்து அனைத்து பகுதிகளிலும் நீர்மோர் பந்தல் அமைக்க உத்தரவிட்டனர். அவர்களின் உத்தரவின்பேரில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் நகர், ஒன்றிய பகுதிகளிலும், தேனி ஒன்றியத்திலும் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. பெரியகுளம் நகரம் மற்றும் ஒன்றிய பகுதியில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, நீர்மோர் ஆகியவற்றை வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் என்.வி.ராதா, ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், நகர துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி சந்தோஷம், முன்னாள் கூட்டுறவு சங்க இயக்குநர் அன்பு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் முத்து, நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் நாராயணன்,  மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காஜாமுயுனுதீன், முன்னாள் அரசு வழக்கறிஞர் வெள்ளைச்சாமி மற்றும் துரைப்பாண்டி, வார்டு செயலாளர் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேனி ஒன்றியம் பழனிச்செட்டிபட்டியில் ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோரை வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர் நாகலாபுரம் முருகேசன், பழனிசெட்டிபட்டி தீபன்சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து