முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: 500 க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,-  ராமேசுவரம் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவந்த மீனவர்கள் வாழ்வாதரம் கறுதி வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று மீன்பிடிக்க நேற்று கடலுக்கு சென்றனர்.
ராமேசுவரம் பகுதி மீனவர்கள் இலங்கை சிறையிலிருக்கும் தமிழக மீனவர்கள் 27 பேரை விடுதலை செய்யக்கோரியும்,இலங்கை கடற்படை வசமுள்ள  தமிழக மீனவர்களின் 184  விசைப்படகுகளை விடுதலை செய்யக்கோருவது உள்பட  நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் சனிக்கிழமை முதல் காலைவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் கோரிக்கைகள் குறித்து மத்திய,மாநில அரசுகள் பரிசீலனை செய்து வருவதாக ராமேசுவரம் மீன்துறை அதிகாரிகள் ராமேசுவரம் மீனவ சங்க தலைவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன் பேரிலும், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மீன்பிடி இடைக்காலத்தடை தொடங்கவுள்ளதால் வாழ்வாதரம் கறுதி மீனவர்கள் வேலைநிறுத்தத்தை ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெற்றனர்.அதன் பின்னர் மீன்பிடிக்க தேவையான சாதனங்களை கேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ராமேசுவரம் மீன்துறை அலுவலகத்தில் மீன்பிடி அனுமதி  சீட்டு பெற்றுக்கொண்டு 500க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு நேற்று காலையில் புறப்பட்டு சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து