முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் முதல்வர் - துணை முதல்வர் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் முதல்வர் - துணை முதல்வர் பங்கேற்பு காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆளும் அதிமுக அரசு தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆறு வார காலம் அவகாசம் அளித்தும் மத்திய அரசு அதை நடைமுறைப்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. மேலும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆளும் அதிமுக அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் , இதற்கு உடனடி தீர்வுகாண மத்திய அரசை வலியுறுத்தியும் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்., சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ,முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ,மற்றும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு ஏற்றனர். இதேபோல் தமிழகம் முழுவதும் அதிமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் அந்தந்த மாவட்டங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடயிருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் மத்திய அரசிற்கு இணக்கமாக தமிழக அரசு செயல்படுகிறது என கடந்த சில நாட்களாக பல்வேறு தரப்பில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஆளும்கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதம் மாலை ஐந்து மணி வரை நடைபெற உள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 10000 மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து