முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
     காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன், அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது அமைச்சர் டாக்டர் மணிகண்டன்  கூறியதாவது:- கடந்த 28 ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 2007-ல் இறுதி தீர்ப்பு வந்தபோது தமிழகத்தில் தி.மு.க.வும் மத்தியில் காங்கிரசும் ஆட்சியில் இருந்தன. இருப்பினும் இறுதி தீர்ப்பினை அரசிதழில் வெளியிட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பின்பு தமிழக முதல்அமைச்சராக இருந்த ஜெயலலிதா மிக நீண்ட சட்ட போராட்டம் நடத்தி கடந்த 2013-ல் நடுவர் மன்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிட செய்து வரலாற்று சிறப்பு மிக்க சாதனை படைத்தார். நடுவர் மன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும்  அமைக்கவில்லை. அதனால் மீண்டும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வலுவான வாதங்களை எடுத்துவைத்து சட்ட போராட்டம் நடத்தியதன் பேரில் தற்போதைய இறுதிதீர்ப்பு கிடைத்துள்ளது. இதன்படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மேலாண்மை வாரியம் அமைக்காமல் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.
     தமிழகத்தின் இந்த ஜீவாதார பிரச்சனையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு எந்த அறிவுரையும் கூறவில்லை.  காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் இதற்காக காங்கிரசுக்கு எந்தவித சிறு அழுத்தமும் தரவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழக அரசும் அ.தி.மு.க.வும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தரும். தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். உச்சநீதிமன்றத்தின் ஆணையை ஏற்று காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை ஏற்க மறுப்பது மத்திய அரசு தமிழகத்திற்கும் டெல்டா விவசாயிகளுக்கும் செய்யக்கூடிய மாபெரும் துரோகமாகும். இந்த 2 கட்சிகளுக்கும் இனிமேல் தமிழகத்தில் இடமில்லை. அவர்களை தமிழக மக்கள் நிச்சயம் கண்டிப்பார்கள். அ.தி.மு.க. எம்.பி.க்கள் கடந்த 19 நாட்களாக பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி பிரச்சனைக்காக பாராளுமன்றம் 19 நாட்கள் முடக்கப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன அழுத்தங்கள் தேவையோ அ.தி.மு.க தொடர்ந்து செய்து வருகிறது. இவ்வாறு கூறினார்.
    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. மாநில இளைஞரணி இணை செயலாளர் கீர்த்திகாமுனியசாமி, மாவட்ட அவை தலைவர் செ.முருகேசன், நகர் செயலாளர் அங்குச்சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள்  ஆனிமுத்து, சுந்தரபாண்டியன், தர்மர், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்ட பாசறை செயலாளர் பால்பாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், முன்னாள் எம்.பி.நிறைகுளத்தான், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் சாமிநாதன், புரட்சித்தலைவி பசுமைத்தமிழகம் நிறுவனர் தலைவர் வி.என்.சுந்தர்ராஜன், முன்னாள் தொகுதி இணை செயலாளர் தஞ்சிசுரேஷ்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கருணாகரன், மாவட்ட ஜெ.பேரவை துணை செயலாளர் மருதுபாண்டியன், மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணை செயலாளர் சதர்ன்பிரபாகரன், உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க.நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து