முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா அணியில் டாம் குர்ரான்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா: மிட்செல் ஸ்டார்க்கிற்குப் பதிலாக இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டாம் குர்ரானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது.

வலது காலில் காயம்
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வருகிற சனிக்கிழமை (ஏப்ரல் 7-ந்தேதி) தொடங்குகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை ஈடன் கார்டன் மைதானத்தில் 8-ம் தேதி எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை 9.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் தொடங்க இருந்த நிலையில், வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்டில் இருந்து விலகினார். சொந்த நாடும் திரும்பும் ஸ்டார்க், ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

அடிப்படை விலையில்...
இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மாற்று வீரரை தேர்வு செய்ய வெண்டிய நிலையில் இருந்தது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான டாம் குர்ரானை தேர்வு செய்யலாம் என்று கூறப்பட்ட நிலையில், நேற்று அதிகாரப்பூர்வமாக டாம் குர்ரானை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 1 கோடி ரூபாய் அடிப்படையில் விலையில் டாம் குர்ரான் ஏலம் விடப்பட்டார். ஆனால் எந்த அணியும் அவரை ஏலம் எடுக்கவில்லை. தற்போது அடிப்படை விலையில் கொல்கத்தா அணி ஏலம் எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து