முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டீவ் சுமித், வார்னருக்கான தண்டனையை குறைக்க ஆஸி. கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

சிட்னி: சுமித், வார்னருக்கான தண்டனையை குறைக்கவேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அதிரடி நடவடிக்கை
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தலா ஓராண்டு தடையும், இளம் வீரர் கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது.

வருவாய் பாதிப்பு...
தாயகம் திரும்பிய ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் தேசத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டதாகவும், தங்களை மன்னிக்கும்படியும் கண்ணீர் விட்டனர்.குறுக்குவழியை கையாண்டதால் பெயர், புகழை இழந்ததுடன் தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்த ஊதியம், போனஸ், போட்டி கட்டணம், ஸ்பான்சர்ஷிப் இழப்பு, ஐ.பி.எல். தடை போன்றவற்றின் மூலம் ஏறக்குறைய தலா ரூ.30 கோடி வருவாயை இருவரும் பறிகொடுத்துள்ளனர்.

குறைக்க வலியுறுத்தல்
இந்த நிலையில், ஸ்மித், வார்னர் பான்கிராப்ட் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட தண்டனை மிகவும் அதிகபட்சமானது என்று ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு தலைவர் கிரேக் டையர் சிட்னியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மேற்கூறிய தகவலை வெளியிட்டார். மேலும், வீரர்களுக்கான தடையை குறைக்கவும் வலியுறுத்துவதாக தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து