தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கலெக்டர் ஆ.அண்ணாதுரை ஆய்வு

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2018      தஞ்சாவூர்
pro thanjai

தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை, பள்ளியூர் கிராமத்தில் கோடை பயிர் சாகுபடியான நெல் நடவு நடைபெறுவதையும், பள்ளியூரில் 3 ஏக்கர் பரப்பளவில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை,   நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

பாபநாசம் வட்டம், சாலியமங்கலம் பள்ளியூர் கிராமத்தில் சர்வே எண் 202  3 ஏக்கர் 4 சென்ட் பரப்பளவில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை மற்றும் கரைப்பகுதியை சுற்றி பழ மரங்கள், தென்னங்கன்றுகளும் வளர்க்க வேண்டும்.  பண்ணைக் குட்டை அமைப்பதனால் நிலத்தடி நீர் மட்டம் சுற்று வட்டார பகுதியில் உயருவதற்கு வாய்ப்பாக அமையும்.  சீதாராமன், தபெ. சுப்ரமணி அய்யா என்பவர் பண்ணைக்குட்டை அமைப்பதற்காக தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை தானமாக அரசுக்கு வழங்கியுள்ளார்.  இதை தொடர்ந்து தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் அரசு சார்பில் பண்ணைக்குட்டை  அமைக்கப்படவுள்ள இடத்தையும் பார்வையிடப்பட்டு அளவீடு செய்யப்பட்டது.  இப்பணியை விரைந்து செயல்படுத்த வேண்டுமென்று வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர்  அறிவுறுத்தினார்.தமிழ்நாடு வேளாண்மை பல்லைக்கழகம்  மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் உளுந்து பயிர் சாகுபடி செய்வதையும், அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் 3,000 ஹெக்டேர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி நடவு நடைபெற்று வருவதை விவசாயிகளிடம் நேரடியாக கலந்துரையாடினார். விவசாயத்திற்கு தேவையான விதை நெல், உரம், நுண்ணூட்ட உரம், இடுபொருட்கள் போன்றவை கிடைக்கிறதா என்று விவசாயிகளிடம் கலெக்டர்   கேட்டறிந்தார்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலைய போரரிசிரியர் டாக்டர் எஸ்.பூர்பாவை, வேளாண்மை இணை இயக்குநர் மதியழகன், பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜஸ்டின், அம்மாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து