முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகமாவட்டத்தில் தொழில் மையத்தின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் கலெக்டர் சீ.சுரேஷ்குமார் பார்வையிட்டார்

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2018      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டத் தொழில் மையத்தின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் பல்வேறு தொழில் நிறுவனங்களை மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார்,  நேரில் பார்வையிட்டு தெரிவித்ததாவது,

தொழில் நிறுவனங்கள்

தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத்திட்டம்(நீட்ஸ்) மூலம் மானியத்துடன் வங்கிக் கிடன் பெற்று சிறப்பான முறையில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்ர்கள்.நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் கிராமத்தில் ப்ளை ஆஷ் எனப்படும் நிலக்கரி சாம்பல், கல்குவாரி துகள் மற்றும் சிமெண்ட் கலவை ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டு “கல்’” தயாரிக்கும் நிறுவனம் டி.ஐ.ஐ.சி வங்கியின் நிதியுதவியோடு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.30.96 லட்சம் ஆகும். இதில் அரசு மானியத் தொகை ரூ.7.52 லட்சம் ஆகும். இந்நிறுவனத்தின் மூலம் சுமார் 20 பேர் வேலைவாய்ப்பினை பெறுகின்றனர்.   நாகப்பட்டினம் ஒன்றியம் பாப்பாகோவில் ஊராட்சியில் மசாலாப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் இந்pயன் வங்கி நிதியுதவியுடன் ரூ.48 லட்சம் திட்ட மதிப்பீட்டில் செயல்பட்டு வருகிறது. இத்திட்ட மதிப்பீட்டுத் தொகையில் ரூ.10.40 லட்சம் அரசு மானியத் தொகையாகும். இந்நிறுவனத்தில் சுமார் 40 பெண்கள் பணிபுரிகின்றனர். புத்தூர் பகுதியில் உள்ள நான்கு சக்கர வாகன வீல் அலைன்மெண்ட் நிறுவனம் சிட்டி யூனியன் வங்கி நிதியுதவியுடன் ரூ.22.20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த மதிப்பீட்டுத் தொகையில் அரசு மானியம் ரூ.4.82 லட்சம் ஆகும். ;.  இத்தொழில் மூலம் 4 நபர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து வருகின்றார்.வடக்குப் பால்பண்ணைச்சேரியில் பி.வி.சி பைப்கள் தயார் செய்யும் நிறுவனம் இந்தியன் வங்கி நிதியுதவியுடன் ரூ.45 லட்சம் திட்ட மதிப்பிட்டில் செயல்பட்டு வருகிறது. இத்திட்ட மதிப்பீட்டுத் தொகையில் ரூ.6.24 லட்சம் அரசு மானியம் ஆகும்.  இத்தொழில் மூலம் 10 நபர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து வருகின்றார்.மின்தடை ஏற்படும் காலங்களில் தங்குதடையின்றி தொழில் நிறுவனங்கள் இயங்கும் வகையில் புதிய ஜெனரேட்டர்கள் வாங்க அரசு மானியமாக 25 சதவீதம் முதல் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை பெற்;று பயனடையலாம். இந்த தொழில் நிறுவனங்களை செம்மையான முறையில் செயல்படுத்திட வேண்டும். புதிய உத்திகளை கையாண்டு, தொழில் அபிவிருத்தி செய்ய வேண்டும்.” என தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது, மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் ப.தாமோதரன், செய்தி மக்கள் தெடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து