காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தலைமை அஞ்சலகம் முற்றுகை

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2018      தேனி
kavery news 4 4 18

போடி- தேனி மாவட்டம்,  போடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  அனைத்து கட்சியினர் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
     காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போடி பகுதியில் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.  போடி தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. போடி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் லட்சுமணன் தலைமை வகித்தார்.
     இதில் போடி நகர தி.மு.க. செயலாளர் செல்வராஜ், தேனி மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சன்னாசி, போடி நகர தலைவர் முசாக் மந்திரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் கே.ராஜப்பன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே.பாண்டியன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் ச.இரகுநாகநாதன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட பொதுச் செயலாளர் காசிராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
     போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் வியாழக்கிழமை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு வணிகர்கள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து