முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடை பெற்றார் மோர்னே மோர்கல்!

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பந்துவீச்சாளார்களில் ஒருவர் மோர்னே மோர்கல். பவுன்சர் பந்துகளை துள்ளியாமாக வீச கூடியவரான இவர் பலமுறை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து உள்ளார். 2006 ஆம் ஆண்டில் அறிமுகமான இவர்  86 டெஸ்டில் 160 இன்னிங்சில் விளையாடி 309 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 8 முறை ஐந்து விக்கெட்டுகள் மேல் எடுத்துள்ளார். 117 ஒரு நாள் போட்டியில் 188 விக்கெட்டுகளும், 20 ஓவர் போட்டியில் 44 ஆட்டங்களில் 47 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இவர் ஆஸ்திரேலியா  அணியுடன் டெஸ்ட் போட்டிதான் தன்னுடைய இறுதி போட்டி என ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்தத் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மோர்கல் சிறப்பாக பந்துவீசிய 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யபட்டார். இந்த நிலையில் ஜோகன்னஸ்பர்க்கில் முடிந்த இறுதி டெஸ்டிலும் முதல் இன்னிங்ஸ்சில் ஒரு விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸ்சில் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தார். போட்டி முடிந்தவுடன் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் சார்பாக அவருக்கு நினைவு பரிசும் வழங்கி கெளரவப்படுத்தபட்டார். சர்வதேச போட்டியில் இருந்து விடைபெற்றுள்ள மேர்கலுக்கு முக்கிய வீரர்கள் பலரும் வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து