முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப்பின் இறக்குமதி வரி அறிவிப்புக்கு பதிலடி: 106 அமெரிக்கப் பொருள்களுக்கு 25 சதவீதம் சீனா கூடுதல் வரி விதிப்பு

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

பெ.்ஜிங்: சுமார் 5,000 கோடி டாலர் (ரூ.32.5 லட்சம்) மதிப்பிலான 106 வகை அமெரிக்கப் பொருள்களுக்கு சீனா 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளது.

கூடுதல் வரிவிதிப்புக்கு உள்படுத்தப்படக் கூடிய பொருள்கள் என்ற தலைப்பில், 1,300 வகை சீனப் பொருள்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை அதிபர் டிரம்ப் வெளியிட்டதற்குப் பதிலடியாக, இந்த அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பழங்கள், பன்றி இறைச்சி உள்ளிட்ட 128 பொருள்களுக்கு சீனா 25 சதவீதம் வரை கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தது.

இதன் மூலம், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளதாக பார்வையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பழங்கள், பன்றி இறைச்சி உள்ளிட்ட 128 பொருள்களுக்கு சீனா 25 சதவீதம் வரை கூடுதல் வரி விதிப்பதாக திங்கள்கிழமை அறிவித்தது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் இரும்பு உருக்குப் பொருள்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்ததற்குப் பதிலடியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதிபர் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில், சீன இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் வகையிலான கூடுதல் வரிவிதிப்பு அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டு வருகிறார்.

இந்தச் சூழலில், அமெரிக்கப் பொருள்களுக்குக் கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை சீனா தற்போது வெளியிட்டுள்ளதால், உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பொருளாதாரப் போர் மூளும் என்ற அச்சம் மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து