முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்குவாஷ் போட்டி: தீபிகா பல்லிகல் வெற்றி

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

ஸ்குவாஷ் போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 32 பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோசல் ஜமைக்காவின் கிறிஸ் பின்னியை எதிர்கொண்டார். இதில் சவுரவ் கோசல் 2-3 எனத் தோல்வியடைந்து வெளியேறினார்.

முதல் இரண்டு கேம்ஸ்களையும் முறையே 11-5, 11-7 என சவுரவ் கோசல் கைப்பற்றினார். இதனால் சவுரவ் கோசல் எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அடுத்த மூன்று கேம்ஸ்களையும் 8-11, 9-11, 10-12 எனத் இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார். விக்ரம் மல்கோத்ரா வெற்றி பெற்றார். ஹரிந்தர் பால் சிங் மலேசியா வீரரிடம் 0-3 என தோல்வியடைந்தார்.

பெண்களுக்கான ஒற்றையருக்கான 32 பிரிவில் தீபிகா பல்லிகல் டிரினிடாட் அண்டு டொபாகோவின் சார்லோட் நாக்ஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் 3-0 என தீபிகா பல்லிகல் எளிதாக வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஜோஷ்னா சின்னப்பா 3-0 என வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து