முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு தலைப்பட்சமாக அமெரிக்கா நடந்து கொண்டால் வர்த்தகப் போரில் எந்த விலையையும் கொடுக்க தயார் அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: வர்த்தக போரில் எந்த விலையையும் கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்காவுக்கு சீனா பதில் அளித்துள்து.

சீனா பொருட்கள் மீது கூடுதலாக 100 பில்லியன் டாலர் மதிப்பு மிக்க வரியை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சீனா வர்த்தக அமைச்சகம் தரப்பில் கூறியபோது, ”சர்வதேச வர்த்தகத்தில் ஒரு தலைப்பட்சமாக அமெரிக்கா நடந்து கொள்ளும் என்றால், வர்த்தக போரில் எந்த விலையையும் கொடுக்க சீனா தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக சீனப் பொருட்கள் மீது 50 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கட்டணங்களை விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அறிவார்த்த சொத்துரிமையை சீனா திருடுகிறது என்று டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

சீனப் பொருட்கள் மீது கூடுதல் கட்டணங்களை அமெரிக்கா விதித்ததற்குப் பழி தீர்க்கும் விதமாக அமெரிக்க இறக்குமதிப் பொருட்களூக்கு 3 பில்லியன் டாலர்கள் கட்டணம் விதித்தது சீனா.

மேலும் சுமார் 128 அமெரிக்கப் பொருட்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த கட்டணச் சலுகைகள், கழிவுகளை சீனா ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அறிவார்த்த சொத்துரிமையை சீனா திருடுகிறது என்று  அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து