முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் தொடரில் 6-வது முறையாக களமிறங்கும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வாரா கேப்டன் கேன் வில்லியம்சன்

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை: ஐபிஎல் தொடரில் 6-வது முறையாக களமிறங்குகிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் டேவிட் வார்னருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதால், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் ஹைதராபாத் அணியை இம்முறை வழிநடத்துகிறார்.

கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்த வார்னர் இல்லாதது அணிக்கு பெரிய அளவில் இழப்புதான். எனினும் 2016-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஹைதராபாத் அணி வில்லியம்சன் தலைமையில் வெற்றி நடை போட காத்திருக்கிறது.

வார்னர் இல்லாத போதிலும் வில்லியம்சனின் அனுபவம் பெரிதும் கைகொடுக்கும் என அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது. அவருக்கு உறுதுணையாக முன்னாள் கேப்டன் ஷிகர் தவண் செயல்படக்கூடும். வார்னரை இழந்துவிட்டதால் தொடக்க பேட்டிங்கில் ஷிகர் தவண் கூடுதல் கவனமும், பொறுப்பும் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பந்துவீச்சில் வழக்கம் போல் மிரட்ட காத்திருக்கிறார் புவனேஷ்வர் குமார். கடந்த இரு சீசன்களிலும் அவர், அதிக விக்கெட்கள் வேட்டையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானும் சுழலில் நெருக்கடி கொடுக்க ஆயத்தமாகி உள்ளார்.

வார்னருக்கு பதிலாக மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் ஷிகர் தவணுடன் தொடக்க வீரராக இடம் பெறக்கூடும். கேப்டன் வில்லியம்சன், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா, மணீஷ் பாண்டே ஆகியோர் மிடில் ஆர்டரில் வலுசேர்க்கக்கூடும்.

அதிலும் சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் 20 பந்தில் சதம் விளாசியிருந்த சஹா மீது கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. பின்கள வரிசையில் ஆல் ரவுண்டர்களான யூசுப் பதான், கார்லோஸ் பிராத்வெயிட், ஷகிப் அல்ஹசன் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடும்.

அணி விவரம்
கேன் வில்லியம்சன் (கேப்டன்), மணீஷ் பாண்டே, ஷிகர் தவண், விருத்திமான் சஹா, அலெக்ஸ் ஹேல்ஸ், புவனேஷ்வர் குமார், ரஷித் கான், ஷகில் அல் ஹசன், சந்தீப் சர்மா, கார்லோஸ் பிராத்வெயிட், யூசுப் பதான், முகமது நபி இசாகில், கிறிஸ் ஜோர்டான், பில்லி ஸ்லான்லேக், சித்தார்த் கவுல், தீபக் ஹூடா, சயத் ஹலீல் அகமது, ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, பசில் தம்பி, என்.நடராஜன், பிபுல் சர்மா, மெகதி ஹசன், ரிக்கி புயி, சச்சின் பேபி, தன்மே அகர்வால்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து