முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன்

சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2018      சினிமா
Image Unavailable

ஜோத்பூர் : மான் வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கி ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

5 ஆண்டுகள்...

கடந்த 1998 செப்டம்பர், அக்டோபரில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே ஹம் சாத் சாத் ஹைன் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் சல்மான் அரிய வகையைச் சேர்ந்த 2 மான்களை வேட்டையாடி கொன்றதாக உள்ளூர் கிராம மக்கள் புகார் அளித்தனர். ஜோத்பூர் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நடிகர் சயீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையில் அடைப்பு...

இதைத் தொடர்ந்து ஜோத்பூர் சிறையில் சல்மான் கான் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டார். அவரது தரப்பில் ஜாமீன் கோரியும் தண்டனையை ரத்து செய்யக் கோரியும் ஜோத்பூர் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதி ரவீந்திர குமார் ஜோஷி மனுக்களை விசாரணை செய்தார்.

சல்மான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மகேஷ் போரா ஆஜரானார். மான் வேட்டை வழக்கின் சாட்சிகள் நம்பகத்தன்மை கொண்டவர்கள் கிடையாது. சல்மான் துப்பாக்கியை பயன்படுத்தினார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று அவர் வாதாடினார். அரசு தரப்பில் பதில் அளிக்க காலஅவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து தீர்ப்பு தொடர்பான விவரங்களை கூடுதல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நேற்று ஒத்திவைத்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவையும் சல்மான்கான் சிறையில் கழித்தார்.

நீதிபதி மாற்றம்...

இந்நிலையில் ராஜஸ்தான் ஐகோர்ட் நேற்று முன்தினம் இரவு திடீரென மாநிலம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் பணியாற்றிய 137 நீதிபதிகளை இடம் மாற்றம் செய்தது. இதில், சல்மான்கானின் ஜாமீன் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் ஜோஷி இடம் மாற்றம் செய்யப்பட்டார். நீதிபதி சந்திரகுமார் சோனக்ரா ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

ஜாமீன் வழங்கி...

அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, சல்மான் கான் ஜாமீன் மனு மீது, விசாரணை நடத்தினார். பின்னர் பிற்பகல் 3 மணியளவில் உத்தரவு பிறப்பித்தார். சல்மான் கானின் ஜாமீன் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 50 ஆயிரம் ரூபாய் சொந்த பிணையில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார். மேலும், 25,000 ரூபாய்க்கு இரு நபர்கள் ஜாமீன் அளிக்கவும் நீதிபதி உத்தவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து