முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் போட்டி: பளு தூக்குதலில் தங்கம் வென்றார் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம்

சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளுதூக்குதலில் இந்தியா 3-வது தங்க பதக்கத்தை வென்றுள்ளது. தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் 77 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்.

77 கிலோ எடைப்பிரிவில்...
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் தமிழகத்தைச்சேர்ந்தவர் ஆவார்.

3-வது இடத்தில்...
வேலுர் மாவட்டம் சத்துவாச்சாரியைச்சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் கடந்த முறை ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா தற்போது வரை 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து