முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடவர் ஹாக்கி இந்தியா - பாக்., போட்டி சமன்

சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகின்றன.  இதில் ஆடவர் ஹாக்கி பிரிவில், இந்தியாவின் தில்பிரீத் சிங் ஒரு கோலும், ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பினை பயன்படுத்தி மற்றொரு கோலும் போட்டு 2-0 என்ற கணக்கில் அணியை முன்னணியில் நிறுத்தினர்.

இதனை அடுத்து பாகிஸ்தான் அணியின் ஜூனியர் முகமது இர்பான் ஒரு கோலும், போட்டி முடிவதற்கு 7 விநாடிகளுக்கு முன் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பினை பயன்படுத்தி அலி முபாஷர் ஒரு கோலும் அடித்து 2-2 என போட்டியை சமன் செய்தனர்.

ஜிம்னாஸ்டிக்: இந்திய வீரர் யோகேஷ்வர் சிங்கிற்கு 14-வது இடம்
காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான தனிப்பிரிவு ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் ஆல்-ரவுண்டு பிரிவில் இந்தியா சார்பில் யோகேஷ்வர் சிங் கலந்து கொண்டார். மொத்தம் 18 நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். 6 பிரிவுகளாக நடைபெற்ற இதில் யோகேஷ்வர் சிங் 90 புள்ளிகளுக்கு 75.600 புள்ளிகள் பெற்று 14-வது இடம் பிடித்தார்.

இங்கிலாந்து வீரர் நைல் வில்சன் 84.950 புள்ளிகள் பெற்று முதலிடமும், மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஹால் 83.975 புள்ளிகள் பெற்று 2-வது இடமும், சைபிரஸ் வீரர் மரியோஸ் ஜார்ஜியோ 83.750 புள்ளிகள் பெற்று 3-வது இடமும் பிடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து