முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் போட்டி: இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி சிங்கப்பூரை வீழ்த்தி தங்கம் வென்றது

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

கேல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி, சிங்கப்பூரை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

நேர் செட்களில் வெற்றி
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி சிங்கப்பூரை எதிர்கொண்டது. முதல் போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தியான்வே பெங்கை எதிர்கொண்டார். இதில் மணிகா பத்ரா 11-8, 8-11, 7-11, 11-9, 11-7 என வெற்றி பெற்றார். 2-வது போட்டியில் மதுரிகா பத்கர் மெங்யூ யூவை எதிர்கொண்டார். இதில் மதுரிகா 11-13, 11-2, 11-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

இந்திய அணிக்கு தங்கம்
3-வது போட்டியில் இரட்டையர்களான மவுமான தாஸ் - மதுரிகா பத்கர் சிங்கப்பூர் ஜோடியை 11-7, 11-6, 8-11, 11-7 என வீழ்த்தினார்கள். அதைத்தொடர்ந்து நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, சிங்கப்பூரின் யிஹான் சோவுவை எதிர்கொண்டார். இதில் அதிரடியாக விளையாடிய மணிகா, 11-7, 11-4, 11-7 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் 3-1 என வெற்றி பெற்ற இந்திய அணி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றது.

நான்காவது இடத்தில்...
இது இந்தாண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா வெல்லும் 7-வது தங்கப்பதக்கமாகும். இந்தியா இதுவரை 7 தங்கம், 2 வெள்ளி, மூன்று வெண்கலப்பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து