முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பாஸ்கா திருவிழாவில் உயிர்த்த ஆண்டவர் ரதபவனி-_அமைச்சர் சீனிவாசன் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் மேட்டுப்பட்டி பாஸ்கா திருவிழாவில் நடந்த உயிர்த்த ஆண்டவரின் ரதபவனியில் அமைச்சர் சி.சீனிவாசன் மற்றும் மும்மதத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
327 ஆண்டுகளாக 96 கிராமங்களின் தாயகமாக விளங்கி வரும் திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை திருத்தலத்தில் இந்தஆண்டுக்கான திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளன்று இரவு பாடுகளின் பாஸ்கா நடைபெற்றது. அன்றிரவு இயேசுவின் போதனைகள், புதுமைகள், வேதனைகள், பாடுகள், கல்வாரி மலையில் நமக்காக உயிர்ஞித்த காட்சிகள் நடைபெற்றது. இரண்டாம் நாளன்று அதிகாலை 5 மணிக்கு பலியான இயேசுவின் திருச்சடல தூம்பா ஊர்வலம் நடைபெற்றது. இயேசுவின் திருச்சடலம் எடுத்து வரப்பட்ட போது ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு பங்கு திருத்தலத்தில் திருப்பலி நடைபெற்றது. இரவு உயிர்ப்பு பாஸ்கா நடைபெற்றது. இயேசு கொண்டு வந்த மீட்பை அழிக்க நரகத்தலைவன் லூசி மற்றும் அவனது குழுவினரின் சூழ்ச்சிகள், மனிதர்கள் விண்ணகத்துக்குச் செல்லாது இருக்க பேய்களின் மாய வேலைகள் முதலியன காட்சிகளாக நடித்து காட்டப்பட்டது. கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசு மரணத்தை வெற்றி கொண்டு உயிர்த்து இவ்வுலகில் நம் திருச்சபையை நிறுவிய வரலாற்றையும் காட்சிகளாக நடித்துக் காட்டப்பட்டது.
3ம் நாள் நிகழ்ச்சியாக  உயிர்த்த ஆண்டவரின் ரதபவனி நடைபெறுகிறது.  காலை 4.30 மணிக்கு பாஸ்கு மேடையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதற்கு நிர்வாக பங்குத்தந்தை வி.செல்வராஜ் மற்றும் மண்ணின் மைந்தர்கள் தலைமை வகித்தனர். அதன்பின் திருவிழா திருப்பலி நடைபெற்றது. இதனை அனுமந்தராயன்கோட்டை பங்குத்தந்தை எர்னெஸ்ட்அந்தோணிசாமி தலைமை தாங்கி நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி நற்கருணைஆசிர் வழங்கி ரதபவனியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், உதயகுமார் எம்.பி., முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் நத்தம் தொகுதி அ.தி.மு.க. செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், அம்மா மக்கள் முன்னேற்றம் கழக மாவட்ட அவைத்தலைவர் ராமுத்தேவர், திருவருட்பேரவை செயலாளர் திபூர்சியஸ், எஸ்.கே.சீஸ் குப்புசாமி, நிர்வாக பங்குதந்தை வி.செல்வராஜ், பங்குத்தந்தை பன்னீர்செல்வம், உதவி பங்குத்தந்தை சேசுதாஸ் மற்றும் பங்கு மக்கள், திருவிழா டிரஸ்ட் கமிட்டியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ரதபவனி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து மீண்டும் திருத்தலத்தை வந்தடைந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து