முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்த முகவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயம்: மதுரை கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

மதுரை. - மதுரை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,  தலைமையில்   நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட ஆட்சித்தலைவர்  மனுக்களை அளித்தனர்.
   இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சிறுசேமிப்பு பிரிவின் சார்பில் 2017ம் ஆண்டிற்கான உலக சிக்கன நாள் விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் சிக்கனம் மற்றும் சேமி;ப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடைபெற்ற கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, நாடகப்போட்டி, நடனப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருக்குறள், அகராதி, வினாடி-வினா புத்தகம், வண்ண பென்சில் பெட்டி, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் உள்ளிட்ட பரிசினையும், 2016-17ம் நிதியாண்டில் மதுரை மாவட்டம், மாநகராட்சி மண்டலம், நகராட்சி, ஊராட்சிஒன்றிய அளவில் சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்த மகளிர் மற்றும் நிலை முகவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்களையும் வழங்கினார்.
மதுரை கோட்டம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புனரமைப்புத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மதுரை இராஜாக்கூர் பெரியார் நகர் குடியிருப்பில் .சரஸ்வதி, க.பெ.வேலுத்தேவர்   வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையினையும், மதுரை தெற்கு வட்டம் சார்பில் 11 திருநங்கைகளுக்கு தலா ரூ.12000 வீதம் திருநங்கை உதவித்தொகைக்கான காசோலைகளையும், 6 நபர்களுக்கு தலா ரூ.20000 வீதம் நலிந்தோர் உதவித்தொகைக்கான காசோலைகளையும், 12 முதியோர்களுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையு  மாவட்ட ஆட்சித்தலைவர்   வழங்கினார்.
                இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ரெ.குணாளன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி.சாந்தா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரம்மநாயகம், இணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) திரு.பூபதி உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து