ரயில் நிலையங்களில் குழந்தைகளை பாதுகாக்க புதிய திட்டம் அறிமுகம்

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018      சென்னை
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி உதயம் திட்டம் தொடங்கபட்டது. ரயில் நிலையங்களில் குழந்தைகள் காணாமல் போவது, வீடுகளில் இருந்து கோபித்து கொண்டு வரும் குழந்தைகளை சமூக விரோதிகள் கடத்தி அவர்களை வடமாநிலங்களுக்கு பணத்திற்காக விற்பனை செய்து வருகின்றனர்.
விழிப்புணர்வு

 இதை தடுக்க உதயம் திட்டம் என்ற திட்டம் ரயில் நிலையங்களில் அமல்படுத்தபட்டு வருகின்றன. இத்திட்டத்தின் நோக்கம் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு குழந்தை குறிப்பிட்ட சில தொழிலாளிகளை கடந்துதான் வெளியே செல்லவேண்டும். அந்த தொழிலாளிகளை அழைத்து அவர்களை இந்த திட்டத்தில் சேர்த்து தனியாக ப்ளாட்பாரத்தில் சுற்றிதிரியும் குழந்தைகளை சம்பந்தபட்ட காவல் நிலையத்தில் ஒப்படைப்பதே இவர்கள் வேலை. இவர்கள் போர்ட்டர்கள், லோடு மேன்கள், சுத்தம் செய்பவர்கள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் முதலிய வேலைகளை செய்பவர்களாக இருப்பர். நிகழ்ச்சியை ரயில்வே கண்காணிப்பாளர் (SP) ஜார்ஜ் ஜார்ஜ் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுகள் பற்றி சிறப்புரையாற்றினார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் எந்த ஒரு குழந்தையும் சமூக விரோதிகளிடம் சிக்கி அவர்களது வாழ்க்கை சீரழிந்துவிடக்கூடாது என்பதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் எனவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பெரம்பூர் ரயில்வே ஆய்வாளர் பச்சையம்மாள், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து