முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார் ஜித்து ராய்

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

கோல்ட் கோஸ்ட் : காமன்வெல்த் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ஜித்து ராய் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார். இதனை அடுத்து பதக்க பட்டியலில் இந்தியா 3ம் இடத்திற்கு முன்னேறியது.

வெண்கலப் பதக்கம் 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்தியா ஏற்கனவே 7 தங்கம் வென்றுள்ள நிலையில் நேற்று மேலும் ஒரு தங்கம் வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஜித்துராய் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். மற்றொரு வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால் வெண்கலப் பதக்கம் வென்றார்.

4 தங்க பதக்கங்கள்...

கடந்த 2017ம் ஆண்டில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜிது ராய் 4 தங்க பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தினையும், காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து