முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுத ஒழிப்பு பேச்சுவார்த்தை நடத்த தயார்: வெள்ளை மாளிகைக்கு வடகொரியா கடிதம்

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

பியாங்கியாங்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - அதிபர் கிம் ஜாங் சந்திப்பின் போது அணு ஆயுத ஒழிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்’’ என்று வடகொரியா கூறியுள்ளது.

தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இதனால் அமெரிக்காவை அழித்துவிடுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அதற்கு வடகொரியாவை அழித்து விடுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் மிரட்டல் விடுத்தார். இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது.

ஆனால் தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அந்நாட்டின் வேண்டுகோளை ஏற்று வடகொரிய பிரதிநிதிகள் பங்கேற்றது பெரும் திருப்பமாக அமைந்தது. அதன்பின்னர் தென் கொரிய பிரதிநிதிகள் வடகொரியா சென்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சு நடத்த தயார் என்று வடகொரிய அதிபர் கிம் அறிவித்தார். அதன்படி மே மாதம் இறுதியில் இரு நாட்டுத் தலைவர்களும் முதல்முறையாக சந்திக்க உள்ளனர். அதற்கான தேதி, நேரம், இடம் ஆகியவை குறித்து இருநாட்டு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அப்போது கொரிய தீபகற்ப பிரச்சினைகளுக்கும், அணு ஆயுதங்கள் பிரச்சினைக்கும் தீர்வு காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் - அதிபர் கிம் சந்திப்பின் போது அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு வடகொரியா அதிபர் அலுவலகம் கடிதம் அனுப்பி உள்ளது. அணுஆயுத ஒழிப்பு குறித்து வடகொரியா நேரடியாக அமெரிக்காவிடம் தெரிவித்திருப்பது இதுவே முதல் முறை. இத்தகவலை அமெரிக்கா வும் உறுதிப்படுத்தி உள்ளது. இது மிகப் பெரும் திருப்பமாகக் கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து