முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை விஷூ பண்டிகைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை, சித்திரை விஷூ புத்தாண்டை முன்னிட்டு சபரிமலையில் ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.

சித்திரை முதல்நாள் தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இதே நாளில் மலையாள மக்களின் புத்தாண்டாக சித்திரை முதல்நாள் விஷு என்று கொண்டாடப்படுகிறது. சித்திரை விஷு நாள் சபரிமலை, குருவாயூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கேரளாவை ஒட்டியுள்ள கோயில்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

விஷு புத்தாண்டு அன்று விஷுகைநீட்டம், விஷூகனி, விஷுசாப்பாடு என்று பல்வேறுவிஷயங்கள் கேரள மக்களால் செய்யப்படுகிறது. இந்த நன்னாளில் கோயில்களில் சென்று கனி பெறுதல், பணம் பெறுதல் போன்றவை அந்த ஆண்டை வளமுள்ளதாக ஆக்கும் என்பது மலையாள மக்களின் நம்பிக்கையாகும்.

அந்த வகையில் இந்த ஆண்டு சித்தரை விஷு வரும் 15-ம் தேதி வருகிறது. இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. விஷுபண்டிகைக்காக திறக்கப்படும் சபரிமலை அடுத்த 10 நாட்களுக்கு திறந்திருக்கும்.

சபரிமலை மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, கோயிலின் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு மோகனரரு முன்னிலையில் கோயில் நடையை திறந்து வைத்தார்.  அதன்பின் கணபதிஹோமத்துடன் பூஜைகள் தொடங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து