முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகர்கோவிலில் சமரச தின நிகழ்ச்சி நீதிபதி கருப்பையா தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      கன்னியாகுமரி
Image Unavailable

உயர் நீதிமன்ற வழிக்காட்டுதலின்படி நாகர்கோவில் நீதிமன்றத்தில் மெகா சமரச தினம் கொண்டாடப்பட்டது.

சமரச தினம்

நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதி கருப்பையா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளுக்கு சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டன.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற வழிக்காட்டுதலின்படி 13-ம் ஆண்டு மெகா சமரச தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதி கருப்பையா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மேலும் சமரசத்தின் நோக்கத்தின் பயன் பொது மக்களுக்கு சென்றடையும் வகையில் துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.சமரசம் குறித்து நீதிபதி பசும்பொன் சண்முகையா செய்தியாளர்களிடம் கூறுகையில், நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளான வரதட்சனை, செக் மோசடி, சொத்துக்கள் சம்மந்தமான வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பிரதி-வாதிகள் ஒன்றாக சேர்ந்து தங்களுக்கிடையே மீடியேட்டர் முன்னிலையில் நிறை குறைகளை பேசி சமரசம் மூலம் தீர்வு காண முடியும். இதனை மேல் முறையீடு செய்ய முடியாது. வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தால் அதன் தன்மை குறித்து திர்ப்பு வர காலதாமதம் ஏற்படும். ஆனால் சமரசம் மூலம் வாதி-பிரதிகளுக்கு உடனடியாக தீர்வு ஏற்படும். வருகிற 13-ம் தேதி வரை இந்த சமரசம் மையம் செயல்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, மாவட்ட காவல்துறை காண்காணிப்பாளர் ஸ்ரீநாத், குடும்பநல நீதிபதி கோமதிநாயகம் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மகேஷ், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் மரிய ஸ்டீபன் மற்றும் வழக்கறிஞர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து