முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு வந்திறங்கிய வெள்ளைப்பூசணி

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டிற்கு தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு வெள்ளைப்பூசணி ஆந்திரா மாநிலத்திலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. சித்திரை முதல் நாளான தமிழ் வருடப்பிறப்பு வரும் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றயை தினம் வீடுகளில் சிறப்பு வழிபாடு நடத்தியும் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். இதேபோல் கேரளாவில் சித்திரை வி~{ என்ற கனிகாணும் நிகழ்ச்சி நடைபெறும். முக்கனிகளையும் சுவாமி முன் படைத்து, அதனுடன் மங்கள பொருட்களை வைத்து வழிபாடு நடத்துவார்கள். மேலும் அன்றைய தினம் தங்கள் உணவில் பல்வேறு விசேசமான இனிப்பு வகைகள் செய்து உறவினர்களுக்கு வழங்குவார்கள். அதிலும் வெள்ளைப் பூசணிக்காய்களால் செய்யப்பட்ட அல்வா, சாம்பார், பச்சடி ஆகியவற்றுக்கு வெள்ளைப்பூசணி முக்கிய இடம் வகிக்கிறது. மேலும் பூசணிக்காய் என்றதும் நமக்கு திரு~;டி பொம்மைதான் நினைவுக்கு வரும் மற்றவர்கள் திரு~;டி எல்லாம் தன்மேல் ஏற்றிக்கொண்டு, உடைத்து சிதரும் அந்த பூசணிக்காய்க்கோ, அதனை உடைப்பவருக்கோ அதன் நற்குணம் தெரிவதில்லை.
 பலரும் அதை ஒரு காயாகவே மதிப்பதில்லை. உடலை இளைக்க செய்வதிலிருந்து சிறுநீரக கோளாறுகளை சரி செய்வது வரை வெள்ளைப் பூசணகிக்காயின் ஒளிந்திருப்பது அத்தனையும் அற்புதமான மருத்துவ குணங்களே. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிலிருந்து கேரளாவிற்கு அனுப்புவதற்காக அதிகளவில் வெள்ளைப்பூசணி ஈரோடு, சேலம், திருநெல்வேலி, பரமக்குடி ஆகிய பகுதியிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு தண்ணீர் நிறைந்த பகுதிகளில் மட்டுமே இந்த பூசணி நன்கு வளரும். தமிழகத்தில் வறட்சியின் காரணமாக பூசணி வரத்து குறைந்துள்ளதால் ஆந்திராவிலிருந்து அதிகளவில் வெள்ளைப்பூசணி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் கிலோ ரூ.30-க்கு விற்ற இந்த வருடம் ரூ.5 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் சித்திரை வருடப்பிறப்பு தமிழகத்தைப் போலவே கேரளாவில் சித்திரை வி~{ உற்சாகமாக கொண்டாடப்படும் விழாவாகும். அதற்காக ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்ட வெள்ளை பூசணி அதிகளவில் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து