முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் வெடிகுண்டு தாக்குதல்: குழந்தைகள் உள்பட 6பேர் பலி

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிந்தனர்.

9 பேர் படுகாயம்...
ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் உள்ள ஷிண்டாண்ட் மாவட்டத்தின் மசூதி அருகே பயங்கரவாதிகள் திடீரென கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் உயிரிழப்பு...
அதில் சிலரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து