முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா விவகாரத்தில் ரஷ்யாவின் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தோல்வி

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்: சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக வெடித்துள்ள விவகாரத்தில் ரஷியா இயற்றிய தீர்மானம் போதிய ஆதரவு கிடைக்காததால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தோல்வி அடைந்தது.

ரசாயன ஆயுத தாக்குதல்...
உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள சிரியாவில் கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் 70-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய ரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அப்பாவி மக்களை கொன்றது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடியது. சர்வதேச ரசாயன ஆயுத தடுப்பு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சிரியாவின் டவுமா நகருக்கு நேரில் சென்று இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்னும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷ்யா முன்வைத்தது.

ரஷ்ய தீர்மானம் தோல்வி...
ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளில் 9 நாடுகள் ஒரு தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால்தான் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்னும் நிலையில் ரஷ்யாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக ஏழு வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் ரஷியா இயற்றிய இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. சில வேளைகளில் 9 வாக்குகளுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ‘வீட்டோ’ என்னும் மறுப்புரிமை அதிகாரம் பெற்றுள்ள ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த தீர்மானம் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து