ஐ.பி.எல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய அட்டவணை

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2018      விளையாட்டு
chennai super kings 2018 4 12

புனே : ன்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சென்னை போட்டிகள் புனேவிற்கு மாறியுள்ளன.

போராட்டம்...

ஐ.பி.எல் 11-வது சீசன் கடந்த 7-ந்தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகள் தடைக்குப்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களம் இறங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானம் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானமாகும். தற்போது தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் பலத்த பாதுகாப்புடன் கொல்கத்தாவிற்கு எதிரான முதல் போட்டி நடைபெற்றது.


புனேவுக்கு மாற்றம்...

மைதானத்திற்கு வெளியே நடைபெற்ற போராட்டம் லத்தி சார்ஜ், போலீஸ் மீது தாக்குதலாக மாறியது. பின்னர் தமிழக அரசு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறியதால் மீதமுள்ள 6 போட்டிகளும் புனேவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

புனேயிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட இருக்கும் போட்டிகளின் விவரங்கள் பின்வருமாறு:-

புதிய அட்டவணை

தேதி - அணிகள்

ஏப்ரல் 20 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
ஏப்ரல் 28 - சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
ஏப்ரல் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ்
மே 5- சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
மே 13 - சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத்
மே 20- சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து