முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் மாவட்டத்தில் 36 வருவாய் கிராமங்களில் ‘கிராம சுவராஜ் அபியான்” - கிராம சுயாட்சி இயக்கம்

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2018      விருதுநகர்
Image Unavailable

   விருதுநகர். -  விருதுநகர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 வருவாய் கிராமங்களில் கிராம சுயாட்சி இயக்கம் செயல்படுத்துவது தொடர்பான அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், தலைமையில்  நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது:
 ‘கிராம சுவராஜ் அபியான்” - கிராம சுயாட்சி இயக்கம் ஏப்ரல் 14ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை மேற்கொள்வதற்கு 36 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வருவாய் கிராமங்களில், சமூக ஒற்றுமையினை மேம்படுத்துதல், ஊரக குடியிருப்பு திட்டத்தில் வீடு இல்லாதவர்களை பயனடையச்செய்தல், தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றிய கருத்துருக்கள், விவசாயிகளின் வருவாயினை பெருக்குதல், மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துதல், பொது சுகாதாரம் மற்றும் ஊராட்சி அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற குறிக்கோள்களை மையப்படுத்தி நடைபெறுகிறது.  கிராம சுயாட்சி இயக்கம் கீழ்க்காணும் நாட்களில் நடைபெறவுள்ளது.
 1. 14.04.2018 (சனிக்கிழமை) அம்பேத்கர் பிறந்த தினம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலத்துறை, சத்துணவு திட்டத்துறை
2. 18.04.2018
(புதன்கிழமை) ஸ்வஜ் பாரத் பர்வ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
3. 20.04.2018
(வெள்ளிக்கிழமை) உஜ்வாலா பஞ்சாயத்து ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை மற்றும் உணவு வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்புத் துறை
4. 24.04.2018 (செவ்வாய்கிழமை) பஞ்சாயத்துராஜ் திவாஸ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
5. 28.04.2018 (சனிக்கிழமை) கிராம சக்தி அபியான் ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை, எரிசக்தித் துறை மற்றும் மின் உற்பத்தி (ம) மின் பகிர்மானக் கழகம் (வுயுNபுநுனுஊழு)
6. 30.04.2018
(திங்கள் கிழமை) ஆயூஸ்மான் பாரத் அபியான் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
7. 02.05.2018 (புதன்கிழமை) கிசான் கல்யான் கார்யசாலா வேளாண்மைத்துறை
8. 05.05.2018 (சனிக்கிழமை) ஆஜ்விகா மற்றும் கௌசல் விகாஸ் மேளா ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 

    பல்வேறு துறைகள் மூலம் நடைபெறும் இந்த இயக்கத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு, பயனடைலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர்   அ.சிவஞானம்.   தெரிவித்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து