முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் மத்திய அரசைக் கண்டித்து ஆசிரியர்கள், மாணவர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திண்டுக்கல்லில் ஆசிரியர்கள், மாணவர் அமைப்பினர் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமர் மோடியைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், விவசாயிகள் மற்றும் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்_2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. திண்டுக்கல் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவர்களின் விடைத்தாள்கள் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பழனி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவர்களின் விடைத்தாள்கள் ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியிலும் திருத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வந்த ஆசிரியர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் கருப்பு பேட்ஜ் அணிந்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் பாலச்சந்திர போஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்ற போது போராட்டக் காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.
திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அந்த இடத்தின் அருகே நடந்த புதிய ஜவுளிக்கடை திறப்புவிழாவில் கேரளாவைச் சேர்ந்த கலைஞர்கள் கெண்டை மேளம் வாசித்துக்கொண்டிருந்தனர். இதனால் அங்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் நாங்கள் உணர்ச்சிபூர்வமாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கும் நிலையில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த நீங்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாத்தியம் வாசிக்கக் கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து