முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய ஊரக வேலை திட்டத்தை கிராம ஊராட்சிகளில் முழுமையாக நிறைவேற்றக்கோரி காத்திருக்கும் போராட்டம்

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2018      விருதுநகர்
Image Unavailable

   கடலாடி-    கடலாடி யூனியன் முன்பு காத்திருக்கும் போராட்டம் செய்த கிராம மக்களிடம் ஆணையாளர் பாண்டி பேச்சுவார்த்தை செய்த பின்னர் கூட்டத்தினர் கலைந்து சென்றனர். 
  தேசிய ஊரக வேலை திட்டத்தை கிராம ஊராட்சிகளில் முழுமையாக நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் ஜனநாயக மாதர்சங்கங்களின் சார்பாக  கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆப்பனூர்-பொதிகுளம்-மாரியூர்-மூக்கையூர் உள்ளிட்ட 10 கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தனர். போராட்டத்திற்கு விவசாய தொழிற்சங்க தாலுகா செயலாளர் வ.மயில்வாகணன் தலைமை  தாங்கினர். தாலுகா செயலாளர்கள்  டி.நவநீதகிருஷ்ணன்-எம்.சுப்பிரமiணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை நடைபெற்றது. தகவல் அறிந்த கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாண்டி போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை செய்த பின்னர் கூட்டத்தினர் கலைந்துசென்றனர். கிராம மக்களும் ஆணையாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து