மாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைகான தேசிய விருது

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2018      இந்தியா
sridevi2 2018 02 25

புதுடெல்லி: 65-வது திரைப்படத் தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் மாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவி, சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

நடிகை ஸ்ரீதேவியின் 300-வது படம் - மாம். 2017ம் வருடம் அவருடைய திரையுலக வாழ்வின் 50-வது வருடம். 1967-ம் வருடம் ஜூலை 7-ம் தேதி துணைவன் படத்தில் ஸ்ரீதேவி அறிமுகமானார். அதே தினத்தில் மாம் படமும் வெளியானது.

ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியான படம் - மாம். ஹிந்தியில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த நான்குப் பதிப்பிலும் சொந்தக் குரலில் பேசினார் ஸ்ரீதேவி.
நடிகை ஸ்ரீதேவி, உறவினரின் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்றபோது, குளியல் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி துபையிலிருந்து மும்பைக்குக் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து