65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: இதுவரை திரைக்கு வராத 'டூலெட்' தமிழில் சிறந்த படமாக தேர்வு ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 விருதுகள் - சிறந்த நடிகை ஸ்ரீதேவி

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2018      இந்தியா
rahman 2018 04 13

புதுடெல்லி: 65-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் பிராந்திய மொழி வரிசையில் இதுவரை திரைக்கு வராத 'டூலெட்' படம் தமிழில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 விருதுகளும், மறைந்த நடிகை ஸ்ரீதேவி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், வசூல் சாதனை படைத்த  பாகுபலி-2-க்கு 3 பிரிவுகளில் தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ளது.
கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கான தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. பிரபல இயக்குனர் சேகர் கபூர் தலைமையிலான குழு இந்த 65-வது தேசிய திரைப்பட விருதுகளை தேர்வு விருதுகான படங்களை செய்துள்ளது. விருதுகளை அறிவிக்கும் போது, ‘பிராந்திய மொழி திரைப்படங்கள் தரத்தில் ஆச்சரியப்பட வைக்கின்றன’ என்று சேகர் கபூர் தெரிவித்தார்.

பாகுபலி-2 படம்
சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது ’டு லெட்’க்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியிருந்தார். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பாகுபலி படத்தின் தொடர்ச்சியாக வெளியான பாகுபலி-2 படம் 3 பிரிவுகளில் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது.  சிறந்த சண்டைப்பயிற்சி, ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மற்றும் சிறந்த பொழுதுபோக்கான திரைப்படம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் பாகுபலி-2 படம் விருது வென்றுள்ளது.

ஸ்ரீதேவிக்கு விருது...
சிறந்த நடிகர் விருது நகர்கிர்தன் படத்தில் நடித்த ரித்தி சென்னுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த நடிகையாக மறைந்த நடிகை ஸ்ரீதேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாம் படத்தில் ஸ்ரீதேவி அம்மாவாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மாம் வெளியாகியது. இளைஞர் ஒருவரால் ஏமாற்றப்படும் தனது மகளை தேற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீதேவி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  நடிகை ஸ்ரீதேவி மறைவு சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமானுக்கு...
சிறந்த இசையமைப்பாளராக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் ஏ.ஆர்.ரகுமான் வென்றுள்ளார். காற்று வெளியிடை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும், மாம் படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் பெறுகிறார். அதேபோல் சிறந்த பாடகியாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் காற்று வெளியிடை படத்தில் ஒரு பாடலை பாடிய சாஷா திரிபாதிக்கு வழங்கப்படுகிறது.

பார்வதி மேனனுக்கு...
மலையாள நடிகை பார்வதி மேனன்  மலையாளத்தில் சிலபஸ் என்ற பட்த்தின் மூலம் 2006 ஆண்டு  அறிமுகமானார்.  தொடர்ந்து  நோட் புக், பெங்களூர்ஸ் டே, என்னு நிண்டே மொய்தீன், சார்லி, டேக் ஆப்  உள்பட பல மலையாள படங்கலீல் நடித்து உள்லார்.  தமிழில் பூ, மற்றும் உத்தம வில்லன், மரியான்  படங்களில்  நடித்து உள்ளார்.  சிறப்பு பிரிவில் பார்வதி மேனனுக்கு தேசிய விருது  அறிவிக்க்ப்பட்டு உள்ளது.

தேசிய விருதுகள் விவரங்கள் வருமாறு:-
* சிறப்பு பிரிவில் பார்வதி மேனன், நடிகர் பங்கஜ் திரிபாதிக்கு  விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
* சிறந்த படம் பகத் பாசில் நடித்த  தொண்டிமுதலும் திரிக்‌சாட்சியும்.
* சிறந்த இந்திப்படம் நியூட்டன்.
* சிறந்த தமிழ் படம்  TO LET ( செழியன் இயக்கியுள்ள இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை).
* மாம் இந்தி படத்தில் நடித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது.
*  சிறந்த தெலுங்கு படம் - காஸி.
* காற்று வெளியிடை படத்தில் வான் வருவான் பாடலை பாடிய ஷாஷா திருப்பதிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது   .
* சிறந்த பாடகருக்கான தேசிய விருது யேசுதாசுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
* சிறந்த கன்னட படம்- ஹெப்பட்டு ராமக்கா.
* சிறந்த குழந்தைகள் படம்- மேகோர்கியா.
* சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது பெறும் படம்- டப்பா(மராத்தி).
* சிறந்த நடிகர்- ரித்தி சென் (நகர்கிர்டான், மேற்கு வங்கமாநிலம்).
* சிறந்த துணை நடிகர்- ஃபகத் ஃபாசில் (தொண்டிமுதலும் திரிக்‌சாட்சியும் , மலையாளம்).
* சிறந்த துணை நடிகை- திவ்யா தத்தா (இராடா).
* சிறந்த குழந்தை நட்சத்திரம்- பனிதா தாஸ், (வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், அசாம்).
* தாதசாகேப் ஃபால்கே விருது- வினோத் கண்ணா, நடிகர்.
* சிறந்த பொழுதுப்போக்கு படம்- பாகுபலி- 2.
* சிறந்த இயக்குநர்- ஜெயராஜ் (பயானகம், மலையாளம்).
* சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது- பம்பாலி (சிஞ்ஜர்).
* சிறந்த ஒளிப்பதிவு- பயானகம், மலையாளம்.
* சிறந்த பாடலாசிரியர்- பிரஹலாத் (’மார்ச் 22’, முத்து ரத்தனந்த பியாடே).
* சிறந்த ஆடியோகிராஃபி - வில்லேஸ் ராக்ஸ்டார்ஸ், அசாமி.
* சிறந்த ஒலி அமைப்பு- லடுக்கி.
* சிறந்த அரங்கமைப்பு- டேக் ஆஃப் (சந்தோஷ் ராமன், டேக்-ஆஃப், மலையாளம்).
* சிறந்த ஒப்பனை- ராம் ரஜாஜ் (நகர்கிர்டான்,).
* சிறந்த ஸ்பெஷல் எஃப்கெட்ஸ்- பாகுபலி 2.
* சிறந்த நடனமைப்பு- கணேஷ் ஆச்சாரியா (டாய்லெட், இந்தி).
* சிறந்த சண்டைக்காட்சி- அப்பாஸ் அலி மொஹுல் (பாகுபலி 2).
* சிறந்த திரைக்கதை- தொண்டிமுதலும் திர்க்‌ஷாஷ்யம், மலையாளம்.
* சிறந்த தழுவல் திரைக்கதை- பயானகம், மலையாளம்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து