முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய அளவில் நடந்த தொழில்நுட்ப போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி மாணவர்கள் சாதனை

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - தேசிய அளவில் நடந்த அகில இந்திய தொழில்நுட்ப போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அகில இந்திய தொழில்நுட்ப கழகம் சார்பில் ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் _2018 தொழில்நுட்பம் சார்ந்த போட்டியினை நடத்தியது. இந்த போட்டி 36 மணி நேரம் இடைவிடாத டிஜிட்டல் புரோக்கிராமிங் ஆகும். நாடு முழுவதும் 6400 கல்லூரிகளில் இருந்து இரண்டரை லட்சம் மாணவ, மாணவிகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இதில் இந்திய அரசாங்கத்தின் சுமார் 30 அமைச்சகத்திடம் இருந்து தீர்வுக்கு வராத பிரச்சனைகளை பட்டியலிட்டு அதை பொறியியல் கல்லூரி மாணவர்களின் முன் தீர்வுக்கு வைக்கப்பட்டது. இதில் 7531 குழுக்கள் பங்கு பெற்றன. போபால், நாக்ஞீர், கோவை உள்ளிட்ட 3 நகரங்களில் இப்போட்டி கடந்த மாதம் 30 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெற்றது.
சமூகஞிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஸ்கீம் இன்டக்ரேசன் பிரச்சனைக்கு திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி மாணவர்கள் தீர்வு கண்டு தேசிய அளவில் முதல் இடத்தையும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையையும் வென்றனர். இந்த தீர்வுக்கு காப்புரிமை பெற்று அரசுக்கு வழங்கி நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவழகன், மாதேஸ்வரன், நரேந்திர பிரசாத், அபிராமி, பி.ஜி.அபிராமி, மிருதுளா ஆகிய மாணவ, மாணவிகளும் சக்திவேல்முருகன், தங்கசெல்வி ஆகிய ஆசிரியர்களும் இடம் பெற்றிருந்தனர்.
தேசிய அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை கல்லூரி தலைவர் தனலெட்சுமி அம்மாள், துணைத்தலைவர்கள் ரகுராம், சுகுமாறன், முதல்வர் மகேந்திரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து