அமெரிக்க அதிபர் டிரம்பின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018      உலகம்
TRUMP 2017 10 07

வாஷிங்டன்: தமிழ் புத்தாண்டு, சிங்கள புத்தாண்டு, நேபாள புத்தாண்டையொட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்பில் வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஜான் ஜே. சுல்லிவன் விடுத்து உள்ள அறிக்கையில்,

உலகமெங்கும் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும், சிங்கள புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும், நேபாள புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்பிலும், அமெரிக்க மக்கள் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறப்பட்டு உள்ளது. புத்தாண்டு வளங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதுடன், அமெரிக்க அரசுடனான கூட்டாளித்துவத்தை வளர்க்கட்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து