எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு ஓரிரு நாட்களில் நீட் தேர்வு ஹால் டிக்கெட்: இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018      தமிழகம்
MBBS-counselling(N)

சென்னை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு வரும் மே மாதம் 6-ம் தேதி நடக்கும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்னும் ஓரிரு நாட்களில் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நுழைவுத் தேர்வு
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கு, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவர்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 6-ம் தேதி...
அதன்படி 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) நடத்தும் நீட் தேர்வுக்கு www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தொடங்கி, மார்ச் 12-ம் தேதி முடிவடைந்தது. சுமார் 15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து