Idhayam Matrimony

வின்னி மண்டேலாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

ஜோகன்னஸ்பர்க்: அண்மையில் காலமான தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலாவின் உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா (81) இந்த மாதம் 2-ம் தேதி காலமானார். கடந்த ஜனவரி மாதம் முதலே உடல் நலக்குறைவால் அவ்வப்போது மருத்துவமனையில் வின்னி மண்டேலா சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள நெட்கேர் மில்பார்க் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து, சோவேடோ நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்களும், தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில், சோவெடோ நகரைச் சேர்ந்த 40,000 இருக்கை கொண்ட மைதானத்தில் வின்னி மண்டேலாவுக்கான இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கார் கலந்து கொண்டு, அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மண்டேலாவுடன் 38 ஆண்டுகள் வாழ்ந்த வின்னி மண்டேலா, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றினார். வின்னியின் திருமண வாழ்க்கையின் பெரும் பகுதியை மண்டேலா சிறையிலேயே கழித்தார். அவர் 27 ஆண்டுகள் சிறையில் இருந்த காலக்கட்டத்தில், அவரது அரசியல் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தார் வின்னி மண்டேலா.கருத்து வேறுபாடு காரணமாக, மண்டேலாவும், வின்னியும் கடந்த 1992-ஆம் ஆண்டு பிரிந்தனர். பின்னர், 1996-ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து