எனது பேஸ்புக் விவரமும் திருடப்பட்டு விட்டது அமெரிக்க கோர்ட்டில் நிறுவனர் மார்க் புலம்பல்

நியூயார்க்: பேஸ்புக்கின் மூலம் தன்னுடைய தகவல்களும் திருடப்பட்டு இருப்பதாக மார்க் ஜூக்கர்பெர்க் அமெரிக்க நீதிமன்றத்தில் கூறி இருக்கிறார்.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடியது சர்ச்சையை உருவாக்கியது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரபல சேனல் 4 தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
பேஸ்புக் தகவல் திருட்டு குறித்து அதன் நிறுவனர் மார்க் மீது நிறைய வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இது குறித்து நீதி மன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. அவரை விசாரித்த டிக் டுர்பின், பேஸ்புக் திருட்டு குறித்து கோபமாக பல கேள்விகளை கேட்டார். இதற்கு மிகவும் சோகமாக அவர் பதிலளித்தார். நீதிமன்றத்தில் மார்க்கிடம் 20 நிமிடம் எஸ் ஆர் நோ என்ற முறையில் கேள்விகள் கேட்கப்பட்டது. கேட்கப்படும் கேள்விகள் எதற்கும் விளக்கம் கொடுக்க கூடாது, எஸ் இல்லை நோ என்று மட்டும்தான் சொல்ல வேண்டும்.
பேஸ்புக்கில் எந்த மாதிரியான முறைகேடுகள் நடந்தது என்பது குறித்து இந்த பகுதியில் கேள்விகள் கேட்கப்பட்டது. நிறைய பேர் பேஸ்புக் பிரச்சினைக்கு பின் பேஸ்புக்கை விட்டு சென்று இருக்கிறார்களா? என்று மார்க்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மார்க் எஸ் என்று பதில் அளித்தார். இதுவரை வெளிவந்த தகவல்களின் படி 100 பேருக்கு 3 பேஸ்புக் பயனாளர்கள் பேஸ்புக்கை விட்டு வெளியேறி உள்ளனர். இதில் பிரபலங்கள் அதிகம். வழக்கறிஞர்கள் மார்க்கிடம் உங்களுடைய தகவல்கள் திருடப்பட்டதா? என்று கேள்வி கேட்டனர். அதற்கு மார்க் எஸ் என்று பதிலளித்தார். ஆனால் அவருடைய தகவல்கள் எப்படி திருடப்பட்டது என்று விளக்கம் கொடுக்கப்படவில்லை. அவர் பொய் சொல்கிறார் என்று மார்க்கிற்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.