மாநிலங்களவை எம்.பி.யாக அருண் ஜெட்லி பதவியேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      இந்தியா
Jaitley 2018 04 15

புதுடெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து எம்.பி.க்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஜெட்லிக்கு உடல்நிலை சரியாக இல்லாத காரணத்தால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரால் பதவியேற்க முடியவில்லை.

இந்நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவைத் தலைவர் அறையில் நேற்று காலை 11 மணியளவில் ஜெட்லி பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெட்லிக்கு, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

65 வயதாகும் ஜெட்லி, உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு இந்த முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  கடந்த 9-ஆம் தேதி டயாலீசஸ் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து தனது வீட்டுக்கு ஜெட்லி திரும்பினார். இருப்பினும் உடல்நிலை முழுவதும் சீராகாததால் வீட்டில் இருந்தபடி தனது பணியை செய்து வருகிறார

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து