முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்தங்கிய மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்: பிரதமர் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

பிஜப்பூர்: சமூகத்தில் பின்தங்கிய மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி கூறினார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், முதல் சுகாதார மையத்தை சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் தொடங்கி வைத்த பிரதமர், அதை தொடர்ந்து ஜங்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாவது:
மத்திய அரசு, ஏழைகளை மேம்படுத்துவதற்கு ஒரு புதிய அணுகுமுறையை கருத்தில் கொண்டுள்ளது. அம்பேத்கர் நமக்கு அரசியல் சாசனத்தை வகுத்துக் கொடுத்துள்ளார். அதன் மூலமாக நமது உரிமைகளை உறுதி செய்துள்ளார். எனவே, உரிமைகளை பாதுகாக்க ஆயுதமேந்த வேண்டிய அவசியமில்லை. அது வாழ்க்கையை சீரழிக்கும்.

உங்களுக்கான உரிமையை பாதுகாக்கவும், வளர்ச்சிப் பாதையில் பணியாற்றவும் அரசு உறுதி பூண்டுள்ளது. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கல்வி தாருங்கள்.

அம்பேத்கராலேயே தலித்துகள் இன்று தங்களது உரிமைகளை உணர்ந்துகொண்டு, கண்ணியமான வாழ்க்கை வாழும் ஆர்வத்துடன் உள்ளனர். மத்திய அரசு அவர்களின் ஆசைகளையும், ஆர்வங்களையும் நிறைவேற்ற செயலாற்றுகிறது.

நாட்டில் பின்தங்கியுள்ள 115 மாவட்டங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு புதிய யோசனைகளை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு மாவட்டமும் அதன் வசமிருக்கும் வளங்களின் அடிப்படையில் வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும். அந்த அனைத்து மாவட்டங்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படும். பின்தங்கிய மாவட்டங்கள் பலவற்றில் ஏராளமாக உள்ள இயற்கை வளங்களை அவற்றின் வளர்ச்சிக்காக பயன்படுத்தலாம்.

உரிய ஊக்குவிப்பும், மாநகராட்சி நிர்வாகம், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், மாவட்ட மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் பட்சத்தில் அந்த மாவட்டங்கள் தகுந்த முன்னேற்றமடையும். புதிதாக தொடங்கப்பட்டுள்ள "கிராம ஸ்வராஜ் யோஜனா' திட்டத்தின் கீழ், ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் நலன்களில் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து